தமிழ் சுலோகங்களுடன் பெளத்த பிக்குகள்; மட்டக்களப்பிலும் உருவானது ‘கோட்டா கோ கம’

Date:

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை, மட்டக்களப்பில் நேற்று (08) முன்னெடுத்திருந்தனர்.

செங்கலடி சந்திவரை பேரணியாகச் சென்று அங்கு “கோட்டா கோ ஹோம் கம” போராட்ட பந்தலையும் அமைத்துள்ளனர்.

“அரசாங்கத்தை விரட்டியடிப்போம்” எனும் தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், உணவு இல்லை, பால்மா இல்லை, எரிபொருள் இல்லை, மின்சாரம் இல்லை, கொள்ளைக்கார பொருளாதார முறைமைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம், மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கொடு, அடிக்காதே! அடிக்காதே!, விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த பௌத்த தேரர்களில் பலரும், தமிழ் மொழில் எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

செங்கலடியில் அமைக்கப்பட்ட கோட்டா கோ கமவில் இரவில் தீப்பந்தமும் ஏந்தி போராட்டம் நடந்தது.

-செங்கலடி நிருபர்-.

spot_imgspot_img

More like this
Related

ருவன்வெலிசாயவில் இரு தரப்பினரிடையே மோதல் – தேரர் ஒருவருக்குத் தலையில் காயம்!

அனுராதபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாய புனிதப் பிரதேசத்திற்கு அருகில் இன்று (12)...

பொறுப்பற்ற வாகன ஓட்டத்தால் பறிபோன உயிர் நிசாம் ஹாஜியாரின் மரணத்திற்கு நீதி கோரி பட்டியடிப்பிட்டியில் பேரணி

பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோத வாகன ஓட்டத்தால் வீதிகளில் அநியாயமாகப் பறிபோகும் உயிர்களுக்கு...

மாடு மேய்க்கச் சென்ற நபர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம் உகன  பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகாகண்டிய பகுதியில் வனக்காட்டுக்குள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்