காலி முகத்திடல் வன்முறைக்கு எதிராக நாளை வைத்திய நிபுணர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!

Date:

காலி முகத்திடலில் இடம்பெற்ற ஜனநாயகப் போராட்டத்தின் மீது கட்டவிழ்த்துவிட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து இலங்கை வைத்திய நிபுணர்கள் சங்கம் நாளை (10) நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர் ஞானசேகரன் தெரிவித்தார்.

அவர் அனுப்பிய ஊடக அறிக்கையில் தெரிவித்ததாவது,

காலி முகத்திடலில் இடம்பெற்ற ஜனநாயகப் போராட்டத்தின் நடாத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ள போது இவ்வாறு தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படமை ஜனநாயகத்தின் மீது ஏவப்பட்ட வன்முறையாகப்ப் பார்க்கிறோம்.

அவசர சத்திர சிகிச்சை தவிர்ந்த ஏனைய எவ்வித சிகிச்சைகளையும் மேற்கொள்ளப் போவதில்லை என தெரிவிப்பதோடு தனியார் வைத்தியசாலைகளிலும் மேற்கொள்ள மாட்டோம்.

நாள் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு மனம் வருந்துவதோடு ஜனநாயகத்தையும் தேசபக்தியையும் விரும்பும் அனைவரும் இதனை ஏற்றுக்கள்வார்கள் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கொங்கோவில் 321 பேருக்கு எபோலா தொற்று

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா பரவலில், 321 பேருக்கு எபோலா...

ஈரானின் உச்ச தலைவர் உயிருடன் இருக்கிறார்… தீவிரமாக செயற்படுகிறார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்!

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்து, பதவியேற்றதிலிருந்து பொதுவெளியில் காணப்படாத ஈரானின் உச்ச தலைவர்...

4 வருடம் சேர்ந்த வாழ்ந்த 22 வயது காதலியை கொன்று புதைத்த காதலன் தலைமறைவு!

தெல்தெனிய, ரங்கல, ஹக்மான கிராமத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில், அடித்துக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்