கோட்டா அரசுக்கு எதிராக பிக்கு மாணவர்கள் பேரணி

Date:

அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கண்டன ஊர்வலம் இன்று (3) கொழும்பு கோட்டையிலிருந்து காலி முகத்திடல் போராட்ட மைதானத்திற்கு பேரணியாக சென்றது.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி பயணிக்க முற்பட்ட போது, பொலிஸார் வீதியை மறித்து தடையேற்படுத்தினர்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனத்தின் எதிர்ப்பு ஊர்வலம் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகில் ஆரம்பமானது. யூனியன் பிளேஸ், கொம்பனித் தெரு, லேக் ஹவுஸ் சுற்றுவட்டம், இலங்கை வங்கி மாவத்தை ஊடாக ஜனாதிபதி மாவத்தைக்குள் பேரணி பிரவேசித்தது.

எனினும், பொலிஸாரின் வீதித் தடைகள் மற்றும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, குழுவின காலி முகத்திடல் போராட்ட இடத்திற்குச் சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

காமக்கொடூரன் மீண்டும் கைது!

பெண் மருத்துவர் ஒருவரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை அச்சுறுத்தி...

அம்பாறை மாவட்டப் பொலிஸாரின் ஏற்பாட்டில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை வழிபாடு

தீபாவளித் திருநாளை முன்னிட்டு அம்பாறை மாவட்டப் பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட பூஜை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்