சட்டவிரோதமாக இந்தியா செல்வதற்காக ஊர்காவற்துறையில் தங்கியிருந்த வவுனியாவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (3) அதிகாலை கடற்படையினரால் கைதான இவர்கள், ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டள்ளனர்.
வவுனியாவை, பூவரசங்குளத்தை சேர்ந்த 33 வயதான கணவன், 32 வயதான மனைவி, 10 வயதான மகன், 65 வயதான உறவினரான முதியவர் ஒருவரே கைதாகினர்.
வறுமை காரணமாக வாழ முடியாமல் இந்தியா செல்ல முயற்சித்ததாக அவர்கள் வாக்குமூலமளித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1