ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியின் பேச்சாளர்களின் பட்டியல் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஒப்புதலுடன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் தயாரிக்கப்பட்டது. எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கண்டியில் இருந்து ஆறு நாள் நடைப்பயணமும், மே தின பேரணியும் தமது கடின உழைப்பு, பணத்தை செலவழித்து மேற்கொள்ளப்பட்டது. எமக்கு எதிராக முறைப்பாடு செய்யும் சரத் பொன்சேகாவின் மனநிலையை ஆராய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது தலைவர் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார. அது தெரியாமல் சரத் பொன்சேகா தான் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர் என நினைத்துக் கொண்டு செயற்பட்டமை குறித்து வருந்துவதாகவும் பெர்னாண்டோ தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறிமதாச தலைமையில் நேற்று (2) நடைபெற்ற கட்சிக் குழுக் கூட்டத்தில் சரத் பொன்சேகாவுக்கு கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், சஜித் பிறமதாச இந்த சம்பவத்திற்காக தன்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரியதாகவும், பொன்சேகா செய்ததை அவர் ஏற்கவில்லை என்றும் அவர் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கலந்து கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.