26.7 C
Jaffna
January 5, 2025
Pagetamil
கிழக்கு

சடலத்தை இனம்காண பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

மட்டக்களப்பில் உயிரிழந்தவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் கடந்த 26.04.2022 அன்று காலை 7.30 மணியளவில் 60 தொடக்கம் 65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலைத் தொடர்ந்து, அங்கிருந்த பஸ் நடத்துனரினால் 1990 அவசர சேவை நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பையேற்படுத்தப்பட்டிருந்தது.

அங்கு வருகைதந்த அவசர சேவை நோயாளர் காவு வண்டி உத்தியோகத்தர்களினால் முதலுதவி வழங்கப்பட்டதனையடுத்து, அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த வயோதிபர் கடந்த 27.04.2022 திகதி பி.ப 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரின் ஊர் மற்றும் பெயர் என்பன தெரியாத நிலையில் அடையாளம் காணப்படாத குறித்த சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சடலத்தை இனங்கண்டுகொள்வதற்காக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீரோடையில் விழுந்து குழந்தை பலி

Pagetamil

காயங்கேணி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப்பொருள்

east tamil

செய்தியாளர் மீது தாக்குதல் – நான்கு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Pagetamil

திருகோணமலை நகர சபையின் முன்னேற்றகரமான செயற்பாடு

east tamil

மூன்றாங் கட்டை மலை விவகாரம்: மூதூரில் சமூக நீதிக்கான போராட்டம்

east tamil

Leave a Comment