26 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையில் வாழ முடியாமல் மேலும் 5 பேர் தமிழகம் தப்பிச் சென்றனர்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாட்டால் இலங்கையில் இருந்து 75 இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை (2) அதிகாலை 2 மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் சென்றுள்ளனர்.

நேற்று (1) நள்ளிரவு யாழ்ப்பாணம் -நெடுந்தீவு கடற்கரையில் இருந்து ஒரு படகில் புறப்பட்ட வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ராஜலெட்சுமி, தயாளன், லதா மற்றும் அவரது ஆறு வயது மகள் தன்ஷிகா, 2 மாத கை குழந்தை தக்சரா என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள் திங்கட்கிழமை அதிகாலை 2 மணி அளவில் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி,பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பால் மா 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

எனக்கு இரண்டு மாத கை குழந்தை உள்ளது. இவ்வளவு பணம் கொடுத்து பால் மா வாங்கி என் குழந்தைக்கு எப்படி கொடுக்க முடியும்? குழந்தைக்கு செலுத்தும் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனையில் போதிய அளவு இல்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் 6 ஆயிரம் வரை வசூல் செய்கிறார்கள்.

என் கணவருக்கு போதிய வருமானம் இல்லை இதே நிலை நீடித்தால் இலங்கையில் பட்னி சாவு ஏற்பட்டு அனைவரும் உயிரிழக்க நேரிடும் எனவே உயிரை காப்பாற்றி கொள்ள இரண்டு மாத கை குழந்தையுடன் கடலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக இலங்கை தமிழ் பெண் லதா தெரிவித்தார்.

மேலும் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் விசாரணைக்குப் பின் இந்த 5 இலங்கைத் தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கபட்டார்கள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி முதல் இன்று வரை 80 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்கிசை துப்பாக்கிச்சூட்டு பின்னணி வெளியானது!

Pagetamil

விளையாட்டு வினையாது: வெளிநாட்டிலுள்ள கணவனை பயமுறுத்த இளம் பெண் ஆடிய நாடகத்தால் நேர்ந்த சோகம்!

Pagetamil

பருத்தித்துறை கடலில் மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு

east tamil

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழப்பு

east tamil

வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

east tamil

Leave a Comment