இலங்கையில் வாழ முடியாமல் தமிழகத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற 13 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று (30) அதிகாலை பலாலி கடற்பரப்பில் வைத்து 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அண்டை நாடான இந்தியாவிற்கு பலர் தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
பலாலி கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படை படகொன்று, தஞ்சம் கோரி சென்றவர்களின் படகொன்றை வழிமறித்து, அதிலிருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
5 ஆண்கள், 5 பெண்கள், 3 குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.