27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இந்தியா

வீதியில் சேட்டை விட்ட இளைஞனை உருட்டி உருட்டி உருட்டுக்கட்டையால் அடித்த இளம்பெண்!

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே, பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை, அந்த பெண் கட்டையால் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

கண்ணவரம் விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் நேற்றிரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்த இளைஞன் ஒருவன், அவரது வாகனத்தை இடைமறித்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, கீழே கிடந்த கட்டையை எடுத்து அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்துள்ளார்.

ஆந்திர மகளிர் ஆணையத்தின் தலைவி வசிரெட்டி பத்மா, இந்த சம்பவம் குறித்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்க்கு எதிராக காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

east tamil

குழந்தைக்குள்ளே குழந்தை

east tamil

மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி

east tamil

உணவு முடிந்ததால் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டார்: பொலிஸ் நிலையத்தில் நடந்த திருமணம்!

Pagetamil

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

Leave a Comment