ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்க தெல்தெனிய நீதவான் கிரான்வில் பெர்னாண்டோ இன்று மாலை உத்தரவிட்டார்.
சந்தேகநபர்கள் மூவரும் குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சந்தேக நபர்களை பரிசோதித்த தெல்தெனிய நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சந்தேக நபர்களை மருத்துவ பரிசோதனைக்காக சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்புமாறும் நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் எதிர்வரும் 13ஆம் திகதி கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1