அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த எதிர்ப்புப் பேரணி இன்று மூன்றாம் நாளில் கலிகமுவவில் இருந்து ஆரம்பிக்கவுள்ளது.
காலை 9 மணிக்கு தொடரும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று 19 கிலோமீற்றர் நடைப்பயணத்தின் பின்னர் தனோவிட்டவை சென்றடையவுள்ளது.
நாளைய தினம் தனோவிட்டவில் இருந்து யக்கல வரையிலான ஆர்ப்பாட்ட பேரணி தொடர்ந்து 30ஆம் திகதி பேலியகொடவை சென்றடையும்.
அதனைத் தொடர்ந்து பேலியகொடையில் இருந்து மே தின ஊர்வலம் இடம்பெற்று பேரணியாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை சென்றடையும்.
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் பெருமளவிலான நபர்கள் கலந்துகொண்டதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கம் சாதகமான எதையும் சாதிக்கத் தவறியுள்ள நிலையில், தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதற்கு உதவுவதற்காக மக்கள் போராட்டம் நடைபெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.