அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு செவ்வாய்க்கிழமை அறிகுறி இல்லாத கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் கமலா ஹாரிஸுக்கு செவ்வாய்க்கிழமை பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
இதையடுத்து ஹாரிஸ் தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். வீட்டில் இருந்தபடியே தனது பணிகளைத் தொடருவார்.தொற்று பாதிப்பில்லை என்ற சேதனை முடிவுக்கு பின்னரே வெள்ளை மாளிகைக்குத் திரும்புவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் தனக்கு தொற்று பாதிப்புக்கான “எந்த அறிகுறிகளும் தெரியவில்லை” என்று கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
57 வயதான ஹாரிஸ், அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு மொடர்னா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸையும், 2021 இல் பதவியேற்ற சில நாளுக்குப் பிறகு இரண்டாவது டோஸையும் செலுத்திக்கொண்டார். ஒக்டோபர் மாத இறுதியில் பூஸ்டர் தடுப்பூசியும் மற்றும் ஏப்ரல் 1 ஆம் திகதி கூடுதல் பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்தக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரோனின் துணை வகையான மிகவும் வேகமாக பரவக்கூடிய எக்ஸ்இ கொரோனா பரவலால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.