யாழில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்: இளைஞன் பலி!

Date:

யாழ்ப்பாணம் – அராலி, வல்லை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.

அதில் பயணிந்த மாவிட்டபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் நிக்சன் (22) எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த ரவிகரன் கனிஸ்டன் (20) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் பிறந்தநாள் நேற்றைய தினமாகும்.

இருவரும் மோட்டார் சைக்கிளில் அராலி – வல்லை வீதியில் பயணித்த வேளை, தெல்லிப்பழை அம்பனை சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த தூணுடன் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்