27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

புத்தளம் நகரசபை உறுப்பினர்கள் போராட்டம்

புத்தளம் நகரசபை உறுப்பினர்கள் பலர் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து துவிச்சக்கர வண்டிகளிலும் வண்டிகளிலும் இன்று (26) மாநகர சபை கூட்டத்திற்கு வருகை தந்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிபொருள், எரிவாயு, பால் மா மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளதையடுத்து போராட்டங்கள் வெடித்துள்ளதுடன், அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எம்.பி.க்கள் நகரின் மையப்பகுதியில் இருந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாதாந்த நகர சபைக் கூட்டம் நடைபெறும் புத்தளம் பொது நூலக வளாகத்திற்கு வந்திருந்த உறுப்பினர்கள் குழு அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடனர்.

அதேநேரம் நகர சபையின் மாதாந்தக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 13 உறுப்பினர்கள், சபை மண்டபத்திற்குள் பதாதைகளை ஏந்தி கோசமும் எழுப்பினர்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதி மேயர் சுசந்த புஸ்பகுமார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் துமிந்த ஆகியோர் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்து நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போது சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

புத்தளம் நகர சபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக உள்ளதுடன் ஒரு ஆசனம் வெற்றிடமாக உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

Leave a Comment