Pagetamil
முக்கியச் செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணையில் ரெலோ கையெழுத்திடாது!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுவதில்லை. எனினும், ஆதரவு கோரும் தரப்புக்களுடன் பேச்சு நடத்தி, அதனடிப்படையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்வது என தமிழ் ஈழ விடுதல இயக்கம் (ரெலோ) தீர்மானித்துள்ளது.

கட்சியின் செயலாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இதனை தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

”நம்பிக்கையில்லா தீர்மானத்தில் என்ன முடிவெடுப்பது என்பது பற்றி இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஆராயப்படவில்லை. எனினும், எமது கட்சி (ரெலோ) அது குறித்து ஏற்கனவே தீர்மானமொன்றை எடுத்துள்ளது.

ரெலோவின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட மாட்டார்கள். ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளும் நிலைமையேற்பட்டால், கலந்து கொள்வோம்.

நம்பிக்கையில்லா பிரேரணையில் எமது கட்சியின் ஆதரவை எந்த தரப்பாவது கோரினால், முதலில் அவர்களுடன் சில விடயங்களை முன்வைத்து பேச்சு நடத்த வேண்டியுள்ளது.

இனப்பிரச்சனை தீர்வு, அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் போன்ற நீண்டகால, உடனடி பிரச்சனைகள் குறித்து பேசுவோம். எமது மக்கள் சார்பில் சாத்தியமான வாக்குறுதியை வழங்கும் தரப்பிற்கு எமது ஆதரவை வழங்குவோம்.

இதேவேளை, ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணைக்கு ரெலோ ஆதரவளிக்கும். தமிழ் மக்கள் மீதான பல்வேறு போர்க்குற்றங்கள், தற்போதைய தவறான பொருளாதார முடிவுகள் போன்றவற்றிற்காக பொருளாதார குற்றவாளியாகவும் அவர் காணப்படுவதால், ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை ஆதரிப்போம் என்றார்.

இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதில்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாக கொழும்பு ஆங்கிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், அது தவறானதாகும். இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இதுவரை கலந்துரையாடல் நடக்கவில்லையென்பதும், ஏற்கனவே நடந்த கலந்துரையாடலில் வாக்கெடுப்பிற்கு அண்மையாக கூடி கலந்துரையாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படியுங்கள்

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!