கால்நடை தீவன விலை அதிகரிப்பால் ஜூன் மாதத்திற்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1500 ரூபாவாகவும் முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் அதிகரிக்கும் என தேசிய கால்நடை சபையின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள சுமித் மகமகே தெரிவித்தார்.
கால்நடைத் தீவன விலை உயர்வு மற்றும் இதர செலவுகள் காரணமாக சிறு மற்றும் நடுத்தர கால்நடைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் வணிகத்திலிருந்து விலகிச் செல்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
இந்நிலை நீடித்தால் நாட்டில் எஞ்சியிருக்கும் பாரிய வர்த்தகர்கள் சிலரே தொழில் நீடிப்பார்கள். தொழில் ஏகபோக நிலைமை உருவாகி, விலை மேலும் உயரலாம் என்றும் அவர் கூறினார்.
ஜனவரி மாதத்தில் சுமார் 98,000 ரூபாயாக இருந்த ஒரு தொன் கால்நடை தீவனத்தின் விலை தற்போது 3 மடங்கு அதிகரித்து 278,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கால்நடை தீவன தட்டுப்பாடு காரணமாக பால் உற்பத்தியும் சுமார் 30 வீதத்தால் குறைந்துள்ளதாக மஞ்சுள சுமித் மகமகே தெரிவித்தார்.
கால்நடைத் தீவனத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வருடமொன்றுக்கு 300 மில்லியன் ரூபாவைச் செலவிட வேண்டியுள்ளது