மோசமான முகாமைத்துவத்தினால் நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தி காலி முகத்திடலில் காலவரையற்ற அமைதியான கட்சி சார்பற்ற மக்கள் போராட்டம் ஆரம்பித்து இன்று 18வது நாளாகிறது.
நாடு முழுவதும் உள்ள நகரங்களில் போராட்டக்காரர்கள் கூடி, அரசாங்கத்தை பதவி விலகக் கோரி உள்ளனர்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, எரிபொருள் விலை, எரிவாயு தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக பொதுமக்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.