காகிதம் உள்ளிட்ட அச்சுப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகக் கோரி எழுத்தாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், அச்சக உரிமையாளர்கள் இணைந்து நடத்திய கவனயீர்ப்புப் பேரணி இன்று (24) பிற்பகல் நடைபெற்றது.
பங்கேற்பாளர்களில் சிலர் சுலோகங்களை எழுதுவதற்கு இலைகள், கமுகு மட்டைகள் போன்றவற்றைப் பயன்படுத்தினர்.
கொள்ளுப்பிட்டி சந்தியில் ஒன்று கூடிய குழுவினர் காலி முகத்திடலை நோக்கி பேரணியாக சென்றனர்.
காலி வீதியூடாக பேரணியாகச் சென்ற அவர்கள் காலி முகத்திடலுக்குள் நுழைந்து அரசாங்கத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1