எதிர்ப்பாளர்களின் கருத்துச் சுதந்திரம் மதிக்கப்படும் அதேவேளையில், பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அது தடையாக இருக்கக் கூடாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று, 12 மாவட்டங்களில் 18 இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், பல முக்கிய வீதிகள் மறிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சில எதிர்ப்புகள் காரணமாக பொது நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மருந்து மற்றும் உணவுப் பொருட்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவை ஊழியர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஜகத் அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்.
சில போராட்டக்காரர்கள் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை திருப்பி அனுப்புவதைக் காணமுடிந்தது என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1