இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhon க்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டிய சீனாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்தார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இலங்கையின் தற்போதைய நிலையிலிருந்து மீள்வதற்கு சீனாவின் ஆதரவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தூதுவர் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1