Pagetamil
மலையகம்

கோட்டாவை பதவி விலக வலியுறுத்தி 100 அடி உயர மரத்தில் ஏறிய நபர்!

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21.04.2022) அட்டன் டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் 100அடி மரத்தில் ஏறி நபர் ஒருவர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், காலி முகத்திடலில் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கேகாலை ரம்புக்கனை பகுதியில் தூப்பாக்கிசூட்டில் உயிரிழந்த நபருக்கு நீதி வேணடும் என கோரியுமே குறித்த நபர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்ஜஸ்ட்ரி கீழ் பிரிவு தோட்டத்தில் 43 வயதுடைய பழனியாண்டி முருகேசு என்ற நபரே இவ்வாறு நூறு அடி உயரம் கொண்ட மரத்தின் மீது எறி இலங்கை தேசிய கொடியை பிடித்தவாறு, எதிர்ப்பு பதாதைகளை குறித்த மரத்தில் காட்சிப்படுத்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து

Pagetamil

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

east tamil

விபத்தில் இரு மாணவர்கள் பலி

east tamil

4 வயது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த தாய்

Pagetamil

Update – டிக்கோயா ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

Leave a Comment