27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

கயவர்களை எம்.பியாக்கியதற்காக மக்களிடம் மன்னிப்பு கோரிய ரிஷாட்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

அப்பாவிகளான அவர்களை சிறைகளில் வைத்துக்கொண்டு, உங்கள் இருப்புக்காக அரசியல் செய்கிறீர்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், மிகவும் காரசாரமாக பேசினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடு தொடர்புபடுத்தி, முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் மெளலவிகளும் சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவர்களை, விசாரணை நடத்துங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள்.

அவர்களை இந்த மூன்று ஆண்டுகளாக வைத்து அரசியல் நடத்தும் நீங்கள் நாசமாகி விடுவீர்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்பு 30 பள்ளிவாசல்களுக்கு மேல் அடித்து நொறுக்கப்பட்டன. காடைத்தனம்களிலே ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படவும் இல்லை; தண்டிக்கப்படவும் இல்லை.

டாக்டர் சாபியை போய் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து தடுத்து வைத்தீர்கள். எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி அவரை விடுதலை செய்தார்கள். இதன் மூலம்,நாட்டில் உள்ள முஸ்லீம் மருத்துவர்கள் மீது ஒரு சந்தேக கண்ணோட்டம் உருவானது.

இலங்கையில் மிகச் சிறந்த சட்டத்தரணி களில் ஒருவராக இருக்கின்ற ஹியாஸ் ஹிஸ்புல்லாவை கைது செய்து தடுத்து வைத்திருந்தீர்கள்.

22 மாதங்களின் பின்பு எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இன்றி அவரை விடுதலை செய்தீர்கள்.

ஏன் இப்படி பாவம் செய்கின்றீர்கள்? இப்படியான பாவம் உங்களை ஒருபோதும் சும்மா விடாது.

நள்ளிரவில் எனது வீட்டுக்கு வந்த போலீசார் என்னை பலாத்காரமாக அழைத்துச் சென்று தடுத்து வைத்தனர். என்ன குற்றம் செய்தேன் என்று கேட்டேன். அவர்களிடம் பதில் இல்லை. ஆறு மாதங்களாக ஒரு சிறிய அறையின் உள்ளே அடைத்து வைத்தார்கள்.

எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இன்றி பின்னர் விடுதலை செய்தார்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தலில் குதித்த பொழுது கோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பகிரங்கமாக மக்களிடம் கூறினோம்.

எனது வேண்டுகோளுக்கு செவிமடுத்த மக்கள், கோட்டாவுக்கு எதிராக வாக்களித்தார்கள்.

இப்போது என்ன நடக்கின்றது.? நான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது எனது கட்சிக்காரர்கள் சிலருடன் பேரம் பேசி அவர்களை வளைத்துக் கொண்டீர்கள்.

இப்பொழுதும் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளும் கொடுத்திருக்கிறீர்கள்.

வாக்களித்த மக்களே உங்களிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன் . எனது வேண்டுகோளுக்கு செவி மடுத்து கயவர்களுக்கு வாக்களித்து தவறிழைத்து விட்டோம் என்பதை நாம் உங்களுக்கு கூறி, உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

ரம்புக்கன அரச பயங்கரவாதத்தினால் ஒருவர் கொல்லப்பட்டார். இதனை கண்டிப்பதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாடு பொருளாதார நெருக்கடியினால் சீரழிந்து சின்னாபின்னமாகி கொண்டிருக்கும் நிலையில்,இன்னும் கதிரையில் இருந்து காலத்தை கடத்தாமல் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்.

அவரை துரத்துவதற்காக, களம் இறங்கி போராடும் இளைஞர்களின் போராட்டத்துக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். இவ்வாறு ரிசாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

GovPay ஆரம்பம்

east tamil

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

Leave a Comment