27.1 C
Jaffna
January 13, 2025
Pagetamil
இலங்கை

பொதுமக்கள் எழுச்சியையடுத்து இலங்கை அரசியலில் ஏற்படும் அதிரடி மாற்றம்!

தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண குறுகிய கால நடவடிக்கையாக அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை அறிமுகப்படுத்துவது குறித்து கட்சித் தலைவர்கள் விவாதித்துள்ளனர்.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் சில சாதகமான விதிகளை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை வலுப்படுத்துவது மற்றும் நீண்ட கால நடவடிக்கையாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவது குறித்து நேற்று சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

தற்போது நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட பல சாதகமான முன்மொழிவுகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கணக்காய்வாளர் நாயகத்தின் மேற்பார்வைக்கு உட்படுத்துவதற்கான அரசியலமைப்பு மற்றும் சில சட்டங்கள் திருத்தங்கள், அரசியல் கட்சிகளை தணிக்கை செய்யும் அதிகாரங்களை கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்குதல் மற்றும் அரசாங்க ஒப்பந்தங்களுக்கு அப்பாற்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வதை தடை செய்தல் ஆகியவை விவாதிக்கப்பட்டன.

அரசாங்க ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் திருத்தங்களை அறிமுகப்படுத்துதல், அரசியல்வாதிகள், உறவினர்கள், அரசு ஊழியர்கள் வெளிநாட்டு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் வைப்பு செய்யப்பட்ட  சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்களை அரசு கையகப்படுத்த அனுமதிக்கும் வரைவு மசோதாக்களை திருத்துதல், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களை நாடாளுமன்றத்திற்கு நியமிப்பதைத் தடை செய்வது மற்றும் ஜனாதிபதியின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது.

பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மீட்பு: கடத்திய மச்சானும் கைது!

Pagetamil

வத்திராயன் கடற்கரையில் கரையொதுங்கிய சிலை

east tamil

Leave a Comment