மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி, துறைநீலாவணைக்குச் செல்லும் பிரதான வீதியில் இன்று காலை மருதமுனையைச் சேர்ந்த இருவர் கோழிகளின் கழிவுகளை பொலித்தீன் பைகளில் இட்டு அதனை முச்சக்கர வண்டியில் ஏற்றி வந்து துறைநீலாவணை பாதையில் வீசினார்கள்.
இவர்களை பின்தொடர்ந்த துறைநீலாவணை சேர்ந்த இளைஞர் குழாம், பொதுமக்கள் ஒன்றிணைந்து பின்தொடர்ந்து பிடித்துள்ளதுடன் அவர்களை எச்சரித்துள்ளதுடன் இருவரும் கொண்டு வந்த கழிவுகளை மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏற்றி அனுப்பியுள்ளனர்.
இவ்விடயமாக பிரதேசத்திற்கு பொறுப்பான களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர்,களுதாவளை பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர்,துறைநீலாவணைக்கான பிரதேச சபை உறுப்பினர் ,களுவாஞ்சிகுடி சுற்றாடல் பொறுப்பதிகாரி,துறைநீலாவணை தெற்கிற்கான கிராமசேவையாளர்,பொதுச்சுகாதார பரிசோதகர் போன்றோருக்கு தொலைபேசி மூலம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தகவல்களையும் வழங்கியுள்ளனர்.