நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து இளைஞர் சமூகத்துடன் கலந்துரையாட அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு எதிராக இளைஞர் சமூகம் ஒன்று திரண்டு வரும் வேளையில் பிரதமர் இந்த அழைப்பை இளைஞர்களுக்கு விடுத்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களிற்காக காலி முகத்திடலில் தற்போது ஒன்றுகூடியுள்ள போராட்டக்காரர்களுடன் பிரதமர் என்ற ரீதியில் தயாராக உள்ளேன்.
நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய சவாலை வெற்றி கொள்ள, போராட்டக்காரர்கள் தெரிவிக்கம் பெறுமதியான கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை வீடு செல்ல வலியுறுத்தியும், குடும்ப ஆட்சிக்கு எதிராகவுமே இளைஞர்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.