Pagetamil
இலங்கை

இலங்கைக்கு உதவ முடிந்த அனைத்தையும் செய்வோம்: சீனா

கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவுவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக சீனா செவ்வாய்க்கிழமை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய நெருக்கடியை சமாளிக்க, சீனாவிடம் பண உதவி கோரி இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது குறித்து கேட்டதற்கு, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இதனை தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமை அவர் கருத்து தெரிவிக்கையில், சீனா இலங்கைக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும், அதை தொடர்ந்து செய்யும் என்றும் தனது அமைச்சகத்தின் முந்தைய கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தினார்.

“சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, இரு நாடுகளும் பரஸ்பர ஆதரவையும் புரிந்துணர்வையும் வழங்கியுள்ளன. இலங்கையின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு சீனா தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது, நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம்,” என்று அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சீனாவில் பரவும் புதிய வைரஸ் இலங்கைக்கு புதியதல்ல!

Pagetamil

பேஸ்புக்கில் பியரை விளம்பரப்படுத்தியவருக்கு ரூ.25,000 அபராதம்!

Pagetamil

வில்பத்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 11 டொல்பின்கள்: மர்மம் தீராது, விசாரணை தீவிரம்

east tamil

100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்குள் நுழையவுள்ளனர்: ஜேவிபி சொல்லும் கதை!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment