இன்று காலை வேளையில் மாத்திரம் பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று பகலில் 5 வீதமான பேருந்துகள் மட்டுமே சேவையில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 16ஆம் திகதிக்குப் பிறகு பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்றார்.
பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இன்று காலை சிறிய அளவிலான தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1