நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (12) நெடுந்தீவு கடலில் கடற்படை படகுகள் இரண்டு மோதி விபத்திற்குள்ளானதில் 4 கடற்படையினர் கடலில் தவறி விழுந்தனர். இவர்களில் 3 பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் மாயமானார்.
மாயமான சிப்பாய் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
காரைநகர் கடற்படை முகாமில் பணியாற்றிய, கம்பளையைச் சேர்ந்த சாகர பியந்த ஜயசேகர (27) என்ற கடற்படை வீரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1