26 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஏற்பாட்டில் எதிர்க்கட்சிகள் சந்திப்பு!

தற்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து ஆலோசிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களிற்கிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, பாட்டலி சம்பிக்க ரணவக்க, அனுர பிரியதர்சன யாப்பா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே சஜித் பிரேமதாச அங்கிருந்து சென்று விட்டார்.

அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதால் இந்த நேரத்தில் செய்ய வேண்டிய முன்னுரிமைகளை அடையாளம் காண ஒரு குழுவை நியமிக்க வேண்டியதன் அவசியம் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

எந்தவொரு இடைக்கால ஏற்பாட்டையும் பரிசீலிப்பதற்கான முதல் படியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த தரப்புக்கள் ஜனாதிபதியை நீக்குவதற்கு ஆதரவாக இல்லை. அத்துடன், அமைச்சரவை கலைக்கப்பட்டாலோ அல்லது ஜனாதிபதி பதவி விலகுவதாலோ அடுத்த தலைமைத்துவம் தொடர்பில் அவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை.

எனவே, நேற்றைய கூட்டத்தில், என்ன செய்ய வேண்டும் என்பதை அடையாளம் காண ஒரு குழுவை அமைக்க கட்சிகள் முடிவு செய்தன.

இடைக்கால நிர்வாகத்திற்குப் பிறகும் எடுக்க வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்து பொது ஒருமித்த கருத்து இருக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்கிசை துப்பாக்கிச்சூட்டு பின்னணி வெளியானது!

Pagetamil

விளையாட்டு வினையாது: வெளிநாட்டிலுள்ள கணவனை பயமுறுத்த இளம் பெண் ஆடிய நாடகத்தால் நேர்ந்த சோகம்!

Pagetamil

பருத்தித்துறை கடலில் மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு

east tamil

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழப்பு

east tamil

வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

east tamil

Leave a Comment