புத்தாண்டின் பின்னர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட புதிய வீட்டில் குடியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (12) தெரிவித்துள்ளார்.
நான்கு வாரங்களுக்குள் ஜனாதிபதியாக தமக்கு வழங்கப்பட்ட வீட்டை காலி செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து வீட்டை விட்டு வெளியேறுவதாகவும், அந்த வீட்டை தாம் சொந்தமாக்க முயற்சித்ததாக மேற்கொள்ளப்படும் பரப்புரை உண்மைக்குப் புறம்பானது எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
குறித்த வீடு தொடர்பான நீதிமன்ற உத்தரவைப் பயன்படுத்தி சிலர் தம்மை அவதூறாகப் பேசுவதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த வீடு 800 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு வீடு அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1