விவசாய இராஜாங்க அமைச்சராக நேற்று (11) சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவுக்கு எதிராக இன்று (12) காலை கொழும்பு டார்லி வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘மக்கள் போராட்டத்தை கேவலப்படுத்தாதே’, ‘ஊழல் ராஜபக்ஷக்களுக்கு ஒட்சிசன் கொடுக்காதே’, ‘மைத்திரிபாலவை வேட்டையாடும் நாய்களை கட்டிப்போடு’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கட்சி தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், தாங்களும் சாந்த பண்டாரவுக்கு எதிரானவர்கள் என சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.