25.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

இலங்கையில் வாழ வழியின்றி மேலும் 19 பேர் தமிழகத்திற்கு தப்பிச் சென்றனர்!

இலங்கையில் வாழ முடியாத சூழலில் மேலும் சிலர் கடல் வழியாக தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலையை சேர்ந்த இரண்டு கை குழந்தையுடன்; 5 குடும்பத்தை சேர்ந்த  19 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (9) இரவு ஒரு படகில் திருகோணமலையை சேர்ந்த 10 பேர் இரண்டு கை குழந்தைகளுடன் மன்னாரில் இருந்து புறப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மெரைன் போலீசார் இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெலிக்ஸ்ரன் (26) திருகோணமலை, மனைவி டெலிக்ஸனா (21), அமர்தசாரகன் சிறிகரன் (27) திருகோணமலை, மனைவி பரினா (24), மகள் சின்சிகா (5), நாகேந்திரன் நிரோஜன் (28) உப்புவெளி, திருகோணமலை, மனைவி சுதா (24),  மகள் விதுசிகா (13), மகன் அஜய் (11), மகள் அபினயா (2) ஆகியோரே தமிழகம் சென்றனர்

இதே போல் மன்னார் பேசாலையில் இருந்து நேற்று சனிக்கிழமை (9) இரவு யாழ்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்த 9 பேர் ஒரு படகில் புறப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை தனுஷ்கோடி வந்து இறங்கி பின்னர் அரசு பேருந்து மூலம் தானாக மண்டபம் அகதிகள் முகாமிற்கு சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த மண்டபம் மெரைன் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

ஜெயக்குமார் விக்னேஷ்மேரி (44), கப்பல்துறை, முல்லைத்தீவு (இவர் சேலம் தாரமங்கலம் முகாமில் 1990-2013 வரை வசித்தார்), இந்திரகுமார் கோடீஸ்வரன் (26), பாலமோட்டை, நவ்வி, வவுனியா (பிறந்தது தமிழகம் பவானி சாகர் முகாம்), கோடீஸ்வரன் கஸ்தூரி (20)
பாலமோட்டை, நவ்வி, லத்தீப் மைக்கேல் ஸ்கேம்ஸ் (32) நாவாந்துறை, யாழ்ப்பாணம்
(தூத்துக்குடி தாளமுத்து நகர் முகாம் 1990-2016), செல்லையா கமலேந்திரன் (41), செல்வபுரம், முல்லைத்தீவு (முன்பு சேலம் தாரமங்கலம் முகாம் 1990-2018), சுப்பிரமணி ஈஸ்வரன் (38) செல்வபுரம், முல்லைத்தீவு (புளியம்பட்டி முகாம்-1990-1992), ஈஸ்வரன் சுசிகலா (31) , ஈஸ்வரன் துவாரகன் (12) , ஈஸ்வரன் நவீன் (1 1/2) என 5 ஆண்களும், 3 பெண்களும், ஒரு குழந்தையும் தமிழகத்தை வந்தடைந்தனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் 19 இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க படுவார்கள் என மெரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாணத்தை மிரட்டும் எலிக்காய்ச்சல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

Pagetamil

ஃபோர்ட் சிட்டி ஆணைக்குழு நியமனம்

east pagetamil

இலிங்கநகரில் இளைஞர் வள நிலையம் திறப்பு

east pagetamil

படகு கவிழ்ந்து ஒருவர் பலி மட்டக்களப்பில் சோகம்

east pagetamil

Leave a Comment