பிரதமர் பதவி விலகி புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச குறித்து தாம் வருத்தமடைந்துள்ளதாகவும், ஊத்தை அமெரிக்கரான அவரது சகோதரனே அவரை இந்த நிலைக்கு தள்ளியதாகவும் வீரவன்ச தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அந்த அத்தியாயம் இப்போது முடிந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் வீரவன்ச கூறினார்.
அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியை தற்போது ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்த விமல் வீரவன்ச, தமக்கு உதவிய நாடுகளை கோபப்படுத்திய அரசாங்கத்தினால் இந்த 4-5 பில்லியன் டொலர் பிரச்சினைக்கு விடை காண முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.