ஜனாதிபதி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான வரைவை விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி சமர்பிக்கும் என தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தக்க வைத்துக்கொண்டு முன்னோக்கி செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே பாராளுமன்றத்தை பலவீனப்படுத்தியதாகவும், இரசாயன உரங்களுக்கு ஜனாதிபதி தன்னிச்சையாக தடை விதித்ததன் காரணமாக உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1