25.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
குற்றம்

மனைவியுடன் சண்டைபிடித்துக் கொண்டு கடல் கடந்த கிளிநொச்சி இளைஞனிற்கு 15 நாள் சிறை!

இலங்கையிலிருந்து பைபர் படகில் தப்பி வந்து தலைமறைவான இலங்கையை சேர்ந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே ஜமீன்தார்வலசை கடற்கரை கிராமத்தில் கடந்த மார்ச் 11ஆம் திகதி நள்ளிரவில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கி நின்றது.

தேவிபட்டினம் மரைன் போலீஸார் படகை கைப்பற்றி, அன்றைய தினமே நடுக்கடலிலும், கடற்கரை பகுதிகளிலும் யாரும் மர்ம நபர்கள் அல்லது கடத்தல்காரர்கள் வந்துள்ளனராஎன விசாரணை செய்தனர்.

போலீஸார் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள இலங்கை மக்கள் உள்ள மறுவாழ்வு முகாம்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சேலம் மறுவாழ்வு முகாமிற்கு இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்ததாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து மரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ் தலைமையிலான போலீஸார் சேலம் சென்று இலங்கை இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில் அவர் கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் நித்தியானந்தா(34) எனவும், மீனவரான இவர் கடந்த மார்ச் 11ஆம் திகதி இலங்கையிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு சட்டவிரோதமோக ஜமீன்தார்வலசை கடற்கரைக்கு தப்பி வந்தார் எனவும் தெரிய வந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மனைவி மற்றும் உறவினர்களுடன் ஏற்பட்ட சண்டையில் மன உளைச்சலில் இருந்ததாகவும், மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையாலும் இந்தியா தப்பி வந்துள்ளார்.

மார்ச் 10ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டு 11ஆம் திகதி நள்ளிரவு தமிழகத்திற்கு சென்றுள்ளார்.

அதனையடுத்து கடற்ரையிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலைக்கு நடந்து சென்று, அவ்வழியாகச் சென்ற லாரியில் ஏறி தஞ்சாவூருக்கு தப்பியுள்ளார். அங்கு கூலி வேலை செய்ததாகவும், நேற்று நண்பரை பார்க்க சேலம் மறுவாழ்வு முகாமிற்கு சென்றதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் மரைன் போலீஸார் நித்தியானந்தாவை கைது செய்து தேவிபட்டினம் போலீஸில் ஒப்படைத்தனர். தேவிபட்டினம் போலீஸார் நித்தியானந்தா பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வந்த வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில். குற்றவாளி நித்யானந்தா இராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1, நீதிபதி முல்லை அவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

Leave a Comment