அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின்3ஆம் தவணை கல்விச் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
முன்னதாக, 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி அடுத்த தவணைக்கு 18ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும்.
எதிர்வரும் 18ஆம் திகதி முதல் பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரம் நீடிக்க தீர்மானம் எட்டப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
இந்த ஆண்டு பாடத்திட்டத்தை முடிக்க குறைந்த கால அவகாசம் இருப்பதால் தவறவிட்ட பாடங்களை உள்ளடக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பேராசிரியர் பெரேரா கூறினார்.




