நேற்று பாராளுமன்றத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளில் துப்பாக்கிகளுடன் வந்து, ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டும் தொனியில் நடந்தவர்கள் இராணுவத்தினர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மோட்டார் சைக்கிள்களில் வந்த இராணுவ சிப்பாய்களை துன்புறுத்திய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு இராணுவ தளபதி சவேந்திர சில்வா பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்’ என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1