சுனைனா கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்!

Date:

நடிகை சுனைனா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

‘சில்லு கருப்பட்டி’ படத்தின் கடைசியாக தமிழ் ரசிகர்களை கவர்ந்த சுனைனா தற்போது விஷால் உடன் லத்தி படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது சுனைனா கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘ரெஜினா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் டொமின் டிசில்வா இயக்கியிருக்கும் இப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. மேலும் இந்தப் படம் பல மொழிகளில் உருவாகிறது.

எல்லோ பியர் புரொடக்‌ஷன் எல்எல்பி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைக்கிறார். பாடல்களுக்கான வரிகளை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ் ஆர் எழுதியுள்ளனர்.

இதற்கிடையில், சுனைனா நகுல் உடன் நடித்த ‘எரியும் கண்ணாடி’ படத்திலும் நடித்துள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகிறார் மாளவிகா மனோஜ்

சூரி நடித்த ‘கருடன்’, ‘மாமன்’ படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம்...

விஜய் பிரச்சாரத்தில் வேட்பாளர் உட்பட 20 பேர் மயக்கம்

தவெக தலைவர் விஜய் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தனி விமானத்தில்...

‘தென் மாநிலங்களுக்கு மாபெரும் வரலாற்று அநீதி’ – கருப்புக் கொடி போராட்டத்தை அறிவித்த ஸ்டாலின்

“மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை திருத்த மசோதா, தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்