அவந்த் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை மாலைதீவு நோக்கி புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 08.20 மணியளவில் மாலைதீவு நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-102 இல் அவர்கள் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.
அப்போது, விமான நிலையத்தில் உள்ள கணினி அமைப்பு மற்றும் பாதுகாப்பு கமரா அமைப்பு முடங்கியிருந்துள்ளது.
சேனாதிபதி குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள புறப்படும் முனையத்தின் ஊடாக விமானத்திற்குள் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு படையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1