முழு அரசாங்கமும் ராஜினாமா செய்து, நாட்டை நடத்தக்கூடிய ஒரு குழுவிடம் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.
அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகமும், தவறான பொருளாதாரக் கொள்கைகளுமே தற்போதைய நிலைமைக்கு முக்கியக் காரணங்களாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல சுட்டிக்காட்டியுள்ளார்.
டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வீதியில் இருக்கும் மக்கள் வேறு வழியில்லாமல் தவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அலவத்துவல குறிப்பிட்டார்.
பால்மா இல்லாத காரணத்தினாலோ அல்லது பணம் இல்லாத காரணத்தினாலோ தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க கூட முடியாத நிலை உள்ளது என்றார்.
நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் புத்தாண்டைக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வரிசைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், தற்போதைய நிலைக்கு மத்தியில் மக்கள் அமைதியாக இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காணத் தவறினால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் அலவத்துவல தெரிவித்துள்ளார்.