இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரின் இலங்கைப் பயணத்தின் போது அவரது நடத்தை குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது மூன்று நாள் உத்தியோகபூர்வ அரசு முறை பயணமாக இலங்கை வந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் உட்பட பல உயர் அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
கொழும்பில் உள்ள லங்கா இந்தியன் ஓயில் நிறுவனத்தின் (எல்ஐஓசி) எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கும் அவர் விஜயம் செய்தார், அங்கு இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
ஜெய்சங்கரின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த எம்பி சுப்பிரமணியன் சுவாமி, ‘சமீபத்திய பயணத்தின் போது முன்னாள் கமிஷ்னர் போல் கொழும்பில் சுற்றித் திரிந்ததாக’ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்று ட்வீட் செய்துள்ளார்.
“இலங்கை அரசாங்கம் பெற்றோல் தட்டுப்பாட்டைத் திறமையாக நிர்வகிக்கிறதா என்பதைச் சரிபார்க்க அவர் ஒரு பெட்ரோல் பங்க் ஒன்றைக் கூட ஆய்வு செய்தார். அவர் நம் உறவுகளை அழிக்க விரும்புகிறாரா? இந்தியாவில் ஏன் ஆய்வு செய்யக்கூடாது? அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.