எதிர்வரும் 31ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக எடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க மகாசங்கத்தினரின் கூட்டம் நடைபெறவுள்ளதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
யாரும் இறக்காத வீட்டில் இருந்து ஒரு மாம்பழம் தருமாறு கேட்ட புராணக் கதையை போல, முடிந்தால் இந்த அரசாங்கத்தால் ஏமாற்றமடையாத வீட்டில் இருந்து ஒரு குவளை தண்ணீர் கொண்டு வருமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேலும் தெரிவித்தார்.
கோத்தபாய ஜனாதிபதியாக செயற்பட்டாலும், அரசாங்க நிர்வாகத்தின் மேற்பார்வையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்க வேண்டும் எனவும், பசில் ராஜபக்ஷவுக்கு அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமெனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நாரஹேன்பிட்டி அபயாராமயவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.