எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியாக இருந்த 41 வயதுடைய நபரை கெஸ்பேவ பிரதேசத்தில் வைத்து கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கல்கிசை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இம்மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில், கைதான குழுவினால் கட்டைகள் மற்றும் கூரிய பொருட்களால் சாரதி அடித்துக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.