25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil
சினிமா

தமிழ் சினிமாவின் மற்றொரு காதல் ஜோடி திருமண பந்தத்தில் இணைந்தது!

நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி இருவரும் சமூக வலைத்தள பக்கங்களில் தங்களின் நிச்சயார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

நடிகர் ஆதி தமிழில்  மிருகம், ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதே போல தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளி படங்களிலும் நடித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகி இருந்த ‘டார்லிங்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இதனைத் தொடர்ந்து, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஹரஹர மஹாதேவகி, கலகலப்பு 2, உள்ளிட்ட பல படங்களிலும் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமில்லாமல், கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இதில், நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஆகியோர் இணைந்து, மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தனர்.

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் சமூக வலைத்தள பக்கங்களில் தங்களின் நிச்சயார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி, தங்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்ததாக இருவரும் குறிப்பிட்டுள்ளதுடன், இந்நிகழ்ச்சியில் இருவரின் குடும்பத்தினர் கலந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

“வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கினார்கள்” – பார்வதி வருத்தம்

Pagetamil

Leave a Comment