தலைமன்னார் கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 220 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து தலை மன்னார் கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது குறித்த வீட்டில் இருந்து 220 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன் போது 17 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞன் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1