இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதால் 10 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நாளாந்தம் தேவையான அளவு எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்த ரத்நாயக்க, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எரிபொருள் கிடைத்தால் பிரச்சினை ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1