26 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இந்தியா

இலங்கை தமிழர்களுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நலனுக்காக 2021-22-ம் நிதியாண்டில் ரூ.80கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை உள்நாட்டு போரின்போது ஏராளமான தமிழர்கள், இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர். தமிழகம் முழுவதும் 108 முகாம்களில் இலங்கை தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்களின் நல்வாழ்வுக்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக முகாம்களில் வாழும்இலங்கை தமிழர்கள் தொடர்பாகமக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா எழுத்துபூர்வ மாக நேற்று பதில் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்காக நிதி யுதவி, மானிய விலையில் அரிசி, இலவச உடைகள், பாத்திரங்கள், ஈமச்சடங்கு உதவி, அடிப்படை வசதிகளுக்காக மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. 2021-22ஆம் நிதியாண்டில் தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.78 கோடி ஏற் கெனவே தமிழக அரசுக்கு வழங் கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

தமிழகத்தில் வாக்காளர் அதிகரிப்பு

Pagetamil

ஆளுநர் வெளிநடப்பு முதல் குரல் வாக்கெடுப்பு தீர்மானம் வரை: தமிழக சட்டப் பேரவைச் சர்ச்சை!

Pagetamil

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

east tamil

Leave a Comment