25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil
ஆன்மிகம்

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்- 2022: கும்ப ராசி!

கும்ப ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

எந்த பிரச்னைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்துவைக்கும் அறிவாற்றல் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!!

கிரகநிலை:

குரு பகவான் ராசியிலும் – ராகு பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திலும் – கேது பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் – சனி பகவான் விரைய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.

இந்த பெயர்ச்சியின் மூலம் பணவரவுகளுக்கான பஞ்சமிருக்காது. கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். நல்ல வரன்கள் தேடிவரும். புத்திர பாக்கியமும் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். கணவன் – மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உற்றார் – உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.

சிலருக்கு அசையும் – அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேரும். செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் போன்றவை கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, கணவன் – மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது உற்றார் – உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம்.

பொருளாதார நிலை

பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன், குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகமும் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் போன்றவையும் உண்டாகும்.

கொடுக்கல் – வாங்கல்

பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும். வம்பு, வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகுவதுடன் லாபங்களும் தாராளமாக அமையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். நிதானமாகச் செயல்படுவது நல்லது.

உத்தியோகம்

பணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறுவதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். சக நண்பர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

அரசியல்

பெயர், புகழ் உயர்க்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகும். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும். வருவாய் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலைப் பெருக்குவீர்கள். அரசு வழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் – உறவினர்களின் ஆதரவுகளின் மகிழ்ச்சியளிக்கும்,. கடன்கள் குறையும்.

கலைஞர்களுக்கு

எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் – மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும் என்றாலும் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் – உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பொன் பொருள் சேரும். சொந்த வீடு வாகனங்களையும் வாங்குவீர்கள்.

மாணவ – மாணவியர்

கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்கலுக்கு செல்வீர்கள். நல்ல நட்புகளால் அனுகூலப் பலன் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

அவிட்டம் 3, 4 பாதம்:

பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.

சதயம்:

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி 1, 2, 3 பாதம்:

கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும்.

பரிகாரம்:
சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய ராசி பலன்கள் – 28.02.2025 – வெள்ளிக்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 27.02.2025 – வியாழக்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 26.02.2025 – புதன்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 25.02.2025 – செவ்வாய்க்கிழமை

Pagetamil

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் – 24.02.2025

Pagetamil

Leave a Comment