கிளிநொச்சி மாவட்டத்தின் பதிவுடன் மீன்பிடி படகொன்று தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோடியாக்கரைக்குஅ அண்மையாக உள்ள கத்தனோடை பகுதியில் இன்று காலை படகு கரையொதுங்கியது.
கிளிநொச்சி மாவட்டத்தை குறிக்கும் KCH என்ற எழுத்து உள்ளடங்கலாக OFRP – A- 0851- KCH என முன்பக்கமும், பின்பக்கம் MDT – 94-PK-180 என எழுதப்பட்ட படகே கரையொதுங்கியுள்ளது.
படகில் இயந்திரம் இருக்கவில்லை.
இதேவேளை, கிளிநொச்சி, கிராஞ்சி பகுதியில் இயந்திரத்துடன் படகொன்றை காணவில்லையேன கடந்த வாரம் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1