26.7 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

காகித தட்டுப்பாடு: சுற்றறிக்கைகள் இனி வட்ஸ்அப்பில்; பல இடங்களில் மின் கட்டணப் பட்டியல் இல்லை!

அதிகரித்து வரும் காகிதத் தட்டுப்பாட்டையடுத்து, திணைக்களங்களுக்கு இடையிலான தொடர்பாடல்களுக்காக சமூக ஊடகங்கள் உட்பட டிஜிட்டல் தளங்களை பயன்படுத்த  பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புகொள்வதற்கு மின்னஞ்சல்கள், வட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடகங்களை அமைச்சு பயன்படுத்தும் என்று அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி கூறினார்.

அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளுடன் தொடர்பைப் பேணுவதற்கு, சூம் கூட்டங்கள் மற்றும் குறுந்தகவல் சேவை (எஸ்எம்எஸ்) மூலம் மற்ற தொழில்நுட்பங்களையும் அவர்கள் பயன்படுத்துவார்கள் என்று அவர் கூறினார்.

அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இருந்து தினமும் ஏராளமான அரசு சுற்றறிக்கைகள் மற்றும் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. நாணய விகிதங்களின் ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு, அச்சிடும் பொருட்கள் மற்றும் இரசாயனங்களை தனியார் துறையினூடாகப் பெறுவது ஒரு பிரச்சினையாக மாறிவருகிறது என்று அரசாங்க அச்சுப்பொறியாளர் கங்கானி லியனகே தெரிவித்தார்.

அச்சிடும் தாள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு மேல் மாகாணத்தில் பரீட்சைகள் உட்பட பல பரீட்சைகள் ஏற்கனவே அடுத்த தவணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அச்சிடுவதற்கான செலவு அதிகரிப்பு, அச்சடிக்கும் காகிதம் மற்றும் மை பற்றாக்குறை ஆகியவை பல அரச துறை நிறுவனங்களை பாதித்துள்ளன.

அவற்றில் இலங்கை மின்சார சபையும் ஒன்று. பல பகுதிகளில் மின்சார நுகர்வோருக்கு நிலுவைத் தொகை குறித்து வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண பட்டியல் வழங்க காகிதம் இல்லாத நிலையில், ஒரு துண்டு காகிதத்தில் கட்டணம் எழுதி வழங்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதியின் இந்திய பயணம்

east tamil

வெளிநாட்டில் தனியார் பல்கலையில் பட்டம் பெற்றுவிட்டு, இலங்கையில் தனியார் பல்கலையை எதிர்த்த ஜேவிபி பிரமுகர்!

Pagetamil

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் பற்றிய தகவல்!

Pagetamil

தேசிய மக்கள் சக்தியின் மற்றொரு எம்.பியின் கல்வித் தகைமையில் சர்ச்சை!

Pagetamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

Leave a Comment